Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.

இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக டிசம்பர் 12, 1990ஆம் ஆண்டில் இருந்து டிசம்பர் 11, 1996ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த டி.என்.சேஷன், கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் 1932ம் வருடம் பிறந்தார். இயற்பியல் பட்டப்படிப்பு முடித்த பின், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்த அவர் ஐ.ஏ.எஸ் படிப்பை முடித்து கடந்த 1989ஆம் ஆண்டு 18 வது மத்திய அமைச்சரவை செயலாளராக பணி புரிந்தார். அதன்பின்னர் 1990 ஆம் ஆண்டு தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்ற பின்னர் தனது பதவி காலங்களில் தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

டி.என்.சேஷன் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்தபோதுதான் வாக்காளர் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என்ற வழக்கத்தையும் கொண்டு வந்தார்.

மேலும் இவர் தேர்தல் கமிஷனராக பணிபுரிந்தபோது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் செய்யும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தார். மேலும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை தேர்தல் வாக்கு சாவடிக்கு அழைத்து வருவதையும் தடுக்க நடவடிக்கைகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தலைமை தேர்தல் கமிஷனராக ஓய்வு பெற்ற பின், 1997ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேபோல் 1999ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டும் தோல்வி அடைந்தார்.

டி.என்.சேஷன் அவர்கள் தனது சிறப்பான பணிகளுக்காக ராமன் மகாசேசே. அமெரிக்காவின் ஹவார்டு பல்கலையில் பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷனுக்கான மாஸ்டர் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version