Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலன் மீது போலீசில் புகார் கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!

Former Big Boss contestant complains to police about boyfriend

Former Big Boss contestant complains to police about boyfriend

காதலன் மீது போலீசில் புகார் கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ஜூலி. இவர் செவிலியராக இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவரது குரல் ஓங்கி ஒலித்தது. அதன் காரணமாக மக்களிடையே பிரபலமடைந்தார். அதன் பிறகு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். எனவே அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார்.

அங்கு இருந்து வெளியேறிய பின், இவர் ஒரு செவிலியராக இருந்தபோதிலும் சில குறும் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வாய்ப்பும் இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

அதன் பின்னர் சினிமா படம் ஒன்றில் அம்மன் வேடமிட்டு நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதையெல்லாம் தாண்டி அவர் மாடலிங்கும் செய்து வந்தார். அதில் தற்போது அவர் மிகவும் பிஸியாக உள்ளார். பிரபல ஹீரோயின்களை விடவும் அதிகமான அளவிற்கு சமூக வலைதளங்களில் பிரபலமானதும், பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜூலி தனது காதலர் மீது இன்று காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகார் மனுவில் அவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த புகாரை அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர் மனீஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம், நகை மற்றும் பல்சர் இரண்டு சக்கர வாகனம் போன்றவற்றை எடுத்துச் சென்றதாகவும் அந்த புகாரின் மூலம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version