1970களில் இருந்து 1980களிலும், சினிமா நடிகைகள் அரசியலில் சேர்வது ஒரு சாதாரணமான நிகழ்வாக மாறியது. அதில் முக்கியமானவர், தமிழ் சினிமா மற்றும் இந்திய அரசியலின் மிகப்பெரிய தலைமையை உருவாக்கியவர். ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள்.
சினிமா உலகில் அரசியலுக்குள் நுழைவது எந்த ஒரு புதிய பயணம் அல்ல. பல பிரபல நடிகர்கள், சினிமாவில் நடித்த பிறகும், அரசியலிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
வரலட்சுமி சரத்குமார் போன்ற நட்சத்திரங்கள், தற்போது அரசியலில் நுழைவதற்காக ஆர்வம் காட்டுகின்றனர் வரலட்சுமி சரத்குமார், குறுகிய காலத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அதுவே அவர் அரசியலில் நுழைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருகிறது.
புதிதாக வெளியான படமான “மதகஜ ராஜா”, இது 12 வருடங்களுக்கு பிறகு வெளியான படம். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில், வரலட்சுமி சரத்குமாரிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து, வரலட்சுமி “நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று கூறினார். படித்தவர்கள் அரசியலுக்கு முன்னதாக வரவேண்டும் என அன் பதிலளித்தார்..
என் இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா மேடம்தான்” என்று கூறினார். அவர் மேலும், “உண்மையில் அவர் ஒரு அயர்ன் லேடிதான்” என்றார்.இதன் மூலம், வரலட்சுமி அரசியலுக்கு வருவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.