Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய ஊதியத்திற்கு இணையாக வழங்க வேண்டும் – பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சங்கம் தீர்மானம்!

#image_title

நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் உள்ள என்ஜினீயர்களுக்கு, உதவி என்ஜினியர்களுக்கு முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி வழங்கிய ஊதியத்திற்கு இணையாக வழங்கிட சங்கங்களை அழைத்து பேசிட வேண்டும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை என்ஜினீயர்கள் சஙக்ம் மற்றும் உதவி என்ஜினீயர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை என்ஜினீயர்கள் சஙக்ம் மற்றும் உதவி என்ஜினீயர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். பின்னர் மாநில பொதுச்செயலாளர் முருகன் செய்தியாளர் பேட்டியில்.

நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் உள்ள என்ஜினீயர்களுக்கு, உதவி என்ஜினியர்களுக்கு முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி வழங்கிய ஊதியத்திற்கு இணையாக வழங்க வேண்டும்.

ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். பொதுப்பணித்துறையையும், பொறியாளர்களின் பணி நலன்களையும் மேம்படுத்த சீர்திருத்தக்குழு அமைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும்  நிரப்ப வேண்டும்.

மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் டெல்டா பாசனத்துக்கு இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என கேட்டதற்கு,  தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்து அறிவிக்கும் என தெரிவித்தார்.

Exit mobile version