முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நிராகரிப்பு!! தமிழக அரசின் அதிரடி!
பொது இடங்கள் சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அருகே உள்ள சிலைகளை அகற்ற கோரி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் சாலையோரங்கள்,பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில்தான் கண்டிகை கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதேபோல மூன்று மாதத்திற்குள் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் சாலையோரங்களில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, தலைவர் பூங்கா என்று ஒன்றை அமைத்து அதில் சாலையோரம் உள்ள தலைவர்களின் சிலைகளை மாற்றி அமைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். யார் அங்கு தங்கள் தலைவர்கள் சிலையை நிரூவுக்கிறார்களோ அவர்கள் சிலையை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சாதி அரசியல் போன்றவற்றை வெளிகாட்டும் வகையில் எந்த ஒரு செயலையும் நிறுவ கூடாது என்று அறிவுறுத்தியுதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் திருப்பூரை சேர்ந்த திருமுருகன் தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணி எழுதிய கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில் திருப்பூரி திருப்பூரில் உள்ள ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகே குறிப்பாக விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை வைக்க திட்டமிட்டிருப்பதாக கூறி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தை கண்ட நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் உள்துறை செயலாளர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது.
நேற்று விசாரணையில், திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி அந்தக் கோரிக்கைக்கும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். மேலும் சிலை வைக்க நிராகரிப்பு வழங்கப்பட்ட கடிதமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து இந்த வழக்கானது நேற்று முடிவடைந்தது.