#HBD_தலைவா! ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் எடப்பாடி பழனிச்சாமி!

0
136

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது 67வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். இவர் கடந்த 1954 ஆவது வருடம் மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்து அதிமுகவில் தன்னை ஒரு தொண்டனாக நிலைநிறுத்திக் கொண்டு இருந்தார்.

பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் என்ற கிராமத்தை அடுத்து இருக்கின்ற சிலுவம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசி அம்மாள் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வெல்ல வியாபாரம் செய்து வந்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ராதா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு மிதுன் என்ற மகன் உள்ளார்.

 

சென்ற 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு முதலமைச்சராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி .அதிமுகவின் சட்டசபை கட்சித் தலைவர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
தற்சமயம் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி அடைந்து தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் வலைதளப் பக்கத்தில் அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் #HBD தலைவா #EdappadiPalanisami போன்ற ஹேஷ் டேக்குகளை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.