Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசுக்கு வழங்கிய முக்கிய ஆலோசனை!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழவிச்சாமி வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் அதிமுகவைப் பொறுத்தவரையில் மக்களின் நலனே முக்கியமானது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் 14 நல வாரியங்களை விசாரணை 35 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியது போலவே ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், எல்லோருக்கும் சமூக கூடங்கள் அமைத்து அதன் மூலம் உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் தான் நோய்த்தொற்று இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசு போர்க்கால அடிப்படையில் ஆன நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு எடுத்தால் மட்டும் தான் இந்த தொற்றை கட்டுப்படுத்த இயலும் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

Exit mobile version