Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகன் திருமணத்தன்று உயிரிழந்த முன்னாள் MLA!! திருப்பதியில் நிகழ்ந்த சோகம்!!

Former Coimbatore MLA Selvaraj died of a heart attack.

Former Coimbatore MLA Selvaraj died of a heart attack.

Coimbatore:முன்னாள் கோவை எம் .எல் .ஏ செல்வராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்.

முன்னாள் எம் .எல் .ஏ செல்வராஜ் அவர்கள், கோவை மாவட்ட திமுக செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார். அவருக்கு 66 வயதாகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் அனுபவம் மிக்க சிறந்த அரசியல் வாதியாக இருந்து வருபவர். இவர் காங்கிரஸ் கட்சியில் போது 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பின்பு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி அதிமுக OPS அணியில் இணைந்தார். பின் திமுகாவில் 2022 ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

மனைவி பெயர் கலாமணி. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று(நவம்பர் -8) நேற்று மூன்றாவது மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. கல்யாணத்தை முடித்துவிட்டு , இரு வீட்டாரும்
கார் மூலம் நேற்று கோவை வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்கள்.

மேலும் திருப்பதி மலையில் இருந்து இறங்கி வரும்போது செல்வராஜ் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து இருக்கிறார். இவரின் உடல் இன்று கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இறுதி சடங்கு இன்று (நவம்பர்-9) நடைபெறும். மேலும் மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மகன் திருமண நாள் அன்றே தந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

Exit mobile version