பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள்: காங்கிரஸ் திமுக அச்சம்

0
117

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தற்போது டெல்லியில் முரளிதர ராவ் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

இதில் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்த அண்ணாமலை, “திருக்குறளில் இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” எனும் திருக்குறளுக்கு முன்னுதாரணமாக பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி தற்போது இருக்கின்றனர் என கூறினார்.

“தான் கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாக மட்டுமே சேர்ந்துள்ளேன். கட்சியின் தலைமை என்ன பொறுப்பு கொடுக்கிறதோ அதற்காக மட்டுமே வேலை செய்வேன். மேலும் கட்சி சார்பாக எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகிறேன்” என அவர் தெரிவித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் கரூர் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர்கள் குறித்தும்,

குறிப்பாக மணல் கொள்ளையில் ஈடுபட்டுவரும் கொள்ளையர்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, வரும் தேர்தலில் கரூர் தொகுதியை பாஜகவின் செல்வாக்கு மிக்க பகுதியாக மாற்ற வேண்டுமென பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து பாஜக காய்களை நகர்த்த வசதியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் பாஜகவை முழுமையாக எதிர்த்து வரும் எம்.பி ஜோதிமணி, செந்தில் பாலாஜி ஆகியோரிடமிருந்து கரூர் தொகுதி பாஜகவில் எதிர்ப்புக்குரல் எழும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.