Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பாஜகவில் இணைகிறார்: தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரா இவர்?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது தற்சார்பு விவசாயம் செய்துவரும் அண்ணாமலை இன்று பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வந்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுய சார்புக்குத் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், கரூர் மாவட்டத்தில் தற்சார்பு விவசாயம் செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

Former IPS officer joins BJP today: Is he the BJP's chief ministerial candidate?
Former IPS officer joins BJP today: Is he the BJP’s chief ministerial candidate?

இவர் வெளிப்படையாகவே தனக்கு பிடித்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தற்போது, டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் முன்னிலையில் பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வெளிவருகின்றன. இன்று காலை 11 மணியளவில் இணைய போகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இவர் தமிழகத்தில் ரஜினி தொடங்கும் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவோ, அல்லது பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவோ களம் இறக்கப் படுவார் என அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version