Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவதூறு வழக்கில் சிக்கிய கேரள முன்னாள் முதலமைச்சர்!

கேரளாவின், முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் 10 லட்சம் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவில் சோலார் பேனல் என்றழைக்கப்படும் சூரிய ஒளி மின் தகடு பெற்றுத் தருவதாக கூறி, மோசடி செய்ததற்காக சரிதா நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக கூறி அவதூறாக பேசியிருந்தார். இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டில் அச்சுதானந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது.

திருவனந்தபுரத்தில் உள்ள முதன்மை நீதிமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி வழக்கு தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நீதிபதி அச்சுதானந்தன் 10 லட்சத்து 10ஆயிரம் ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Exit mobile version