முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

0
180

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

அ.தி.மு.க. முன்னாள் சட்டத்துறை அமைச்சரும்,மாநிலங்களவை எம்.பி.யுமான  சி.வி. சண்முகம் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் அ.தி.மு.க. தொண்டராக இருந்து படிப்படியாக வளர்ந்து,பலமுறை தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தின் கல்வி, சட்டம் மற்றும் வணிக வரி அமைச்சராக பணியாற்றியுள்ளார். கட்சியின் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 2016 தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சரானார்.மேலும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பல்வேறு பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சைக்கு பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினார்.மேலும் தொடர்ந்து ஓய்வில் இருந்த சி.வி.சண்முகம் மருத்துவர்களின் அறிவுரைப்படி பல்வேறு நோய்களுக்கு மருந்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கபட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற இருந்த நிலையில் சி.வி.சண்முகம் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி உறுப்பினர்கள் சி.வி.சண்முகம் அவர்களை பார்பதற்க்காக மருத்துவமனை விரைந்தனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அ.தி.மு.க. தொண்டர்களை வருத்தமடைய செய்துள்ளது.