முன்னால் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி தலைவர்!
பீகார் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஆண்டு நடைபெற்றது.அந்த தேர்தலானது 3 கட்டங்களாக வாக்குகள் சேகரிக்கப்பட்டது.பெருமித வாக்குகளுடன் பா.ஜ.க வே ஆட்சி அமைத்தது.தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் என்பவர் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தார்.அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.
தற்போது பீகார் மாநிலத்தில் பாஜக முன்னால் அமைச்சர் மற்றும் ஜே.டி.யு எமஎல்ஏ ஆன மேவாலால் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.அவருக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்பட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தலைவர்கள் அனைவரும் அவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தற்போது அதிக அளவு தலைவர்கள் தேர்தல் பிரேச்சாரத்தில் ஈடுபட்டதால்,பலருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பலருக்கும் கொரோனா தொற்று பாதித்தது.திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகி தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.அமமுக வேட்பாளர் எஸ்.காமரஜ்க்கு கொரோனா தொற்று உறுதியானது.மக்களுடன் மக்களாக கலந்து நடப்பவர்களுக்கு அதிக அளவு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.