அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து ஐந்து வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவர் தன்னை ஏமாற்றி இருப்பதாகவும் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது.
இந்த சூழ்நிலையில், துணை நடிகை கொடுத்த புகாரின் பெயரில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மீது பாலியல் வன்கொடுமை போன்ற 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்வதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். இதற்கு இடையில் முன்ஜாமீன் கேட்டு மணிகண்டன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருந்ததன் காரணமாக, நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக, மணிகண்டன் திடீரென தலைமறைவானார். அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களும் தலைமறைவாகி இருந்தார்கள்0 மணிகண்டனை பிடிப்பதற்கு தீவிரம் காட்டிய காவல்துறையினர் பெங்களூருவில் அவரை கைது செய்தார்கள் அங்கே இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஜூலை மாதம் 2ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். அதன்படி சைதாப்பேட்டை சிறையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அடைக்கப்பட்டிருப்பிருக்கிறார். அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தவர் துணை நடிகை சாந்தினி ஆவார். இவர் நாடோடிகள் திரைப்படத்தில் பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருப்பார். அவரைத்தான் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கடந்த 5 வருட காலமாக திருமணம் செய்யாமலே அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார். அதோடு மூன்று முறை கருக்கலைப்பு செய்திருப்பதாக துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் தற்சமயம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.