முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு! உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கேவியட் மனு!

0
141

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பலரிடமிருந்து 3 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு பணி நியமனம் வழங்காமல் அதோடு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி, பாபுராஜ், பி.எஸ். பலராமன், எஸ். கே முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

ராஜேந்திரபாலாஜி என்றால் தமிழகத்தில் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது, அந்தளவிற்கு தன்னுடைய பேச்சாலும், செயலாலும், அனைவரின் மத்தியிலும் பிரபலமானவர் ராஜேந்திர பாலாஜி.

மேலும் அவர் எதிர்க்கட்சியை விமர்சிக்கும் விதம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது, அரசியல்வாதிகள் அனைவரும் மேடைப்பேச்சுகள்போது தங்களுக்கு உரிய பாணியில் நாசுக்காக தெரிவிக்கும் விஷயத்தை இவர் ஆணித்தனமாக தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு செல்வார். அதன் காரணமாகவே இவர் பொதுமக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இந்த நிலையில், அவர் மீது போடப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் தெரிவித்து ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்தது, இதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாபுராஜ்,பலராமன், எஸ். கே. முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கிl தன்னுடைய தரப்பு கருத்தை கேட்காமல் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்து புகார்தாரர் விஜய் நல்லதம்பி சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்.