நீங்கள் ஆட்சியிலேயே நீடிக்க முடியாது! முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர்!

0
122

சமீபத்தில் நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நல்ல ஓட்டுக்களை போடக்கூடும் என்ற காரணத்தால், அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் எச்சரித்த வண்ணம் இருந்தார்கள்.

ஆனாலும் தேர்தல் ஆணையம் மிகவும் கண்டிப்புடன் தான் இருந்து வந்தது. இருந்தாலும் கூட அதிகார பலத்தின் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளும் கட்சியான திமுக கள்ள ஓட்டு போடும் வேலையில் இறங்கியது.

இந்த நிலையில், சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுக கள்ள ஓட்டு போட முயல்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைக்க அவர் நேரடியாக அந்த வாக்குச்சாவடிக்கு அதிமுகவினருடன் சென்றார்.

அங்கே ஒருவர் திமுகவிற்கு கள்ள ஓட்டு போட முயன்றபோது அவரை கையும், களவுமாக, பிடித்து அவருடைய சட்டையை கழற்றி அவரை காவல் துறையிடம் ஒப்படைத்தார்.

பின்பு இந்த விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பாக சிக்னல் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவை சேர்ந்த நபரை பிடித்து கொடுத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த நேரத்திலும் கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடுக்கப்பட்ட பழைய புகார்களை தூசிதட்டி எடுத்து மறுபடியும், மறுபடியும், அவரை வெவ்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்திருக்கிறது தமிழக அரசு. இது ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கு என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தெரிவித்த அவர் முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கை போன்றவற்றை பார்த்தோமானால் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பாதுகாக்க முயற்சியை அவர் முன்னெடுக்கிறார் என்ற எண்ணம் தோன்றி மறைகிறது. ஆகவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிமுகவை முடக்கும் நினைப்பில் கேலிக்கூத்தான விஷயங்களை செய்து வருகின்றார்கள் என்ற நடவடிக்கைகளின் மூலமாக அதிமுகவை முடக்கி விட இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் கழகப் பணிகளை செய்து வருகிறார்கள். கட்சித் தலைமை முடிவெடுத்தால் அதிமுக அவற்றை தலைமையின் கீழ் இயங்குவதை தொண்டர்களை ஏற்றுக்கொள்வார்கள் தற்சமயம் இருக்கும் இரட்டை தலைமையால் கட்சிக்குள்ளும், தொண்டர்களுக்குள்ளும் எந்தவிதமான மன குழப்பமில்லை என கூறினார்.

அதேபோன்று ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் பேசும்போது என் மீதும் காவல்துறையை வைத்து பொய் வழக்கு போடுவதாக மிரட்டுகிறார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரை சிறையில் அடைத்து விட்டால் அதிமுகவை அழித்து விடலாம் என்று திமுகவின் தலைவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய எண்ணம் ஈடேறாது, அதிமுக தோற்றுவிக்கவில்லை நாம் தனியாக நின்று திமுகவிற்கு சவால்விட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இதுபோன்ற நிலை நீடித்தால் நீங்கள் ஆட்சியில் நீடிக்க முடியாது. தொடர்ச்சியாக பல கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியில் இருந்து உங்களை தூக்கி எறிவோம் என்று தெரிவித்திருக்கிறார்.