2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் உதவித்தொகை அந்தக் கூட்டத் தொடர் நடைபெற்று 11ம் தேதி தேர்தல் நேற்று நடந்த சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று இருக்கின்ற காரணத்தால், பதவி ஏற்காமல் இருந்த சட்டசபை உறுப்பினர்களின் 9 பேர் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் , சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்கள். அதிமுக சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் இசக்கி சுப்பையா, வைத்திலிங்கம், விஜய பாஸ்கர் போன்ற நான்கு சட்டசபை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
. திமுக சார்பாக அமைச்சர் மதிவேந்தன், சிவசங்கர், உள்ளிட்டோர் பதவி ஏற்றுக் கொண்டார்கள். சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்ப்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கெடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஜயபாஸ்கர் அதிமுக தலைமை மற்றும் என்னை வெற்றி பெற வைத்த விராலிமலை மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்த அவர், எப்போதும் போல பழய துடிப்புடன் மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த அதிமுக தலைமை மற்றும் என்னை வாக்களித்து வெற்றிபெற வைத்திருக்கின்ற வாக்காளப் பெருமக்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாக பணிபுரிவோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆலோசனைப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் என்று தெரிவித்திருக்கிறார்.