முன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி!
கொரோனா தொற்றானது ஆரம்பித்த காலத்தில் மக்கள் வீட்டினுள்ளே இருந்ததால் அதிகளவு விபத்துக்கள்,கொலை மற்றும் கொள்ளைகளை தவிர்க்க முடிந்தது.இருப்பினும் தற்போது தென்மேற்கு டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரின் மனதையும் பதைபதைக்க செய்கிறது.இந்த படுகொலையானது சினிமாவில் படம் எடுப்பது போல நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது.
முன்னால் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்,காங்கிரஸ் மற்றும் பாஜகவில் பணிபுரிந்துள்ளார்.அவர் முதலில் காங்கிரஸில் இருக்கும் போது 1991 களில் சேலம்,திருச்சி போன்ற மாவட்டங்களில் எம்.பி ஆக பணியாற்றியுள்ளார்.அதனையடுத்து மூன்று ஆண்டுகளிலேயே காங்கிரஸ் ஏற்பட்ட சில மன கசப்புகளால் அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார்.அதனையடுத்து பாஜகவில் இணைந்து செயல்பட்டார்.அப்போது வாஜ்பாய் அமைச்சரவையில் எரிசக்தி அமைச்சராக பணியாற்றினார்.
தற்போது அவர் தென்மேற்கு டெல்லியில் வசித்து வருகிறார்.அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி பெயர் கிட்டி குமாரமங்கலம்.இவர் பிரபலான வழக்கறிஞர்.இவரை கொலை செய்ய பல நாட்களாக இவரது வீட்டில் வேலை செய்பவர்கள் திட்டம் போட்டுள்ளனர்.இவர் வீட்டில் துணிகளை துவைக்கும் ராஜு என்பவர் மற்றும் பணி பெண்ணாக வேலை செய்ய வந்த மஞ்சு என்பவரும் சேர்ந்து செய்த திட்டம் என போலீசார் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.
கிட்டி குமாரமங்கலம் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதனை அறிந்த பணிப்பெண் மஞ்சு,தனது சக வேலையால் ஆன ராஜுவிற்கு தகவல் தெரவித்துள்ளார்.மஞ்சு தகவல் தெரிவித்ததும் ராஜூ தனது கூட்டாளிகள் மூவருடன் அங்கு சென்றுள்ளார்.முதலில் ராஜூ வீட்டின் காளிங் பெல்லை அலுத்தியுள்ளான்.பணிப்பெண் மஞ்சு வெளி வந்து பார்த்து போது யாரும் காணப்படவில்லை.அதனையடுத்து ராஜூவும் அவரது கூட்டாளிகளும் மஞ்சுவை கட்டி ஓர் அறையில் வைத்து பூட்டியுள்ளனர்.
பின்னர் கிட்டி குமாரமங்கலம் உள்ள அறைக்கு சென்று அவரை தலைகாணி வைத்து அமர்த்தி கொலை செய்துவிட்டு அங்குள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துகொண்டு தப்பிவிட்டனர்.அதனையடுத்து பணிப்பெண்ணான மஞ்சு தனது கட்டை தனாகவே அவிழ்த்துவிட்டு போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.விரைந்து வந்த போலீசார் மஞ்சுவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு,கிட்டு குமாரமங்கலம் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.போலீசார் விசாரணையில் இந்த கொலையானது திட்டமிட்டு செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.கொலையின் முக்கிய கைதியான ராஜூ என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.இரண்டாம் கட்ட விசாரணை நடக்கும் எனவும் கூறுகின்றனர்.