முன்னால் எம்.பி கொரோனா தொற்றால் பலி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!
கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் இந்த வருடம் கொரோனாவின் 2 வது அலை உருவாகி கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தினால் அதிக அளவு கொரோனா தொற்று பரவியது.பீகார் மற்றும் மகராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிகப்படியான மக்கள் பலியாகி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி திரையுலகினர்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது இந்த பிரச்சாரத்தின் மூலம் பரவியது.அதில் பல அரசியல்வாதிகளின் உயிர்களும் பலியானது.அதில் ஸ்ரீ வில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்று உறுதியான நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனையடுத்து தற்போது மகாராஷ்டிரா மாநிலம் காங்கிரஸ் கட்சியின் முன்னால் எம்.பி மற்றும் மூத்த தலைவருமான ஏக்நாத் கெய்வாட் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.சிகிச்சை பலனின்றி ஏக்நாத் கெய்வாட் உயிரிழந்தார்.அவரது உடல் மும்பை சிவாஜி பார்க் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்,தொண்டர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.
மறைந்த ஏக்நாத் கெய்வாட் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும்,இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஓர் நல்ல தலைவரை இழந்துவிட்டோம் என தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் அரசியல் கட்சி தலைவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.