முன்னாள் அதிபர் ஓபாமா ரஷ்யாவில் நுழைய தடை! இது தான் தடைக்கு காரணமா!!

0
249
#image_title
முன்னாள் அதிபர் ஓபாமா ரஷ்யாவில் நுழைய தடை! இது தான் தடைக்கு காரணமா!
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேருக்கு ரஷ்யாவில் நுழைவதற்கு தடைவிதித்து ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடந்த போருக்கு அமெரிக்கா அரசு சில பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேருக்கு ரஷ்யா நாட்டுக்குள் நுழைய ரஷ்யா அரசு தடைவிதித்துள்ளது.
ரஷிய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கா விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மீதான விரோதமான ஒரு தாக்குதல் கூட தண்டிக்கப்படாமல் போகாது என்று வாஷிங்டன் நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் அமெரிக்க வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல்  பத்திரிக்கையின் செய்தியாளர் இவான் கார்ஸ்கோவிச் ரஷ்யா உளவு போலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் இவான் கார்ஸ்கோவிச் அவர்களிடம் ரஷிய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய அடையாள அட்டை இருந்தும் போலிசார் அவரை கைது செய்தது குறிப்படத்தக்கது.