பா.ஜ.க முன்னாள் முதல்வர் காலமானார்! பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜினாமா செய்தவர்!

0
110

பா.ஜ.க முன்னாள் முதல்வர் காலமானார்! பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜினாமா செய்தவர்!

முன்னாள் உத்தரபிரதேச முதல்வரும் முன்னாள் ராஜஸ்தான் கவர்னருமான கல்யாண் சிங் சனிக்கிழமை லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலமானார் என்று எஸ்ஜிபிஜிஐ தெரிவித்துள்ளது.89 வயதான மூத்த தலைவரின் மரணம் செப்சிஸ் மற்றும் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக நடந்தது என்று மருத்துவமனை மேலும் தெரிவித்தது.நேற்று இரவு 9:15 மணிக்கு அவர் காலமானார்.

முன்னாள் உ.பி முதல்வர் ஜூலை 4ஆம் தேதி தொற்று மற்றும் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.முன்னதாக அவர் டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆகஸ்ட் 23 அன்று மாலை சிங் இறுதி சடங்குகள் நரோராவில் உள்ள கங்கைக் கரையில் நடைபெறும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 23 அன்று உத்திரப்பிரதேசத்தில் பொது விடுமுறை இருக்கும்.சிங் 1991 இல் முதல் முறையாக உத்தரப்பிரதேச முதல்வராக நியமிக்கப்பட்டார்.ஆனால் 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார்.1997இல் இரண்டாவது முறையாக முதலமைச்சரானார்.ஆனால் 1999ல் பிஜேபியை விட்டு வெளியேறி தனது சொந்தக் கட்சியை உருவாக்கினார்.

சிங் 2004 இல் மீண்டும் பாஜக-வில் நுழைந்தார்.மேலும் புலந்த்ஷாகரிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் 2009இல் இரண்டாவது முறையாக பாஜகவை விட்டு வெளியேறினார்.மேலும் 2009 இந்திய பொதுத் தேர்தலில் எட்டாவில் இருந்து சுயேட்சையாக போட்டியிட்டார். அவர் 2014 இல் மீண்டும் பாஜகவில் சேர்ந்தார்.மேலும் ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.அவர் ஐந்து வருடங்கள் ஆளுநராக இருந்தார்.மேலும் 2019இல் மீண்டும் அரசியலில் நுழைந்தார்.

செப்டம்பர் 2019இல் பாபர் மசூதியை இடித்ததற்கான குற்றச் சதிக்காக அவர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.2020ல் மத்திய புலனாய்வு பிரிவின் சிறப்பு நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்தார்.அந்த ட்வீட்டில் உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஒரு மறக்க முடியாத பங்களிப்பை விட்டுச் சென்றிருக்கிறார் என்று மோடி கூறினார்.