நடிகர் ரஜினிகாந்த் பெயரில் பவுண்டேஷன்! 2 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல்!!
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு மூலமாக 2 கோடி ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அதாவது தொழில்நுட்பம் வளர்ந்துவரும் காலகட்டத்தில் மோசடி கும்பல் பல்வேறு வகையில் நம்மிடம் இருந்து பணத்தையும் நமது தனிப்பட்ட தகவல்களையும் மோசடி செய்து திருடி வருகின்றனர். உதாரணமாக கடந்த சில மாதங்களாக வாட்ஸ் ஆப்பில் யூடியூப் சப்ஸ்கிரைப் செய்தால் பணம் கிடைக்கும் என்ற முறையில் பல்வேறு மக்களிடம் இருந்து மோசடி கும்பல்கள் பல கோடி ரூபாய்களை மோசடி செய்துள்ளது.
மேலும் நமது மொபைல்களுக்கு வரும் தவறான அழைப்புகள், தவறான லிங்குகள் மூலமாகவும் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி கும்பல் திருடி வருகின்றது. மேலும் ஆதார் எண் மற்றும் கை ரேகையை மட்டும் வைத்து ஓடிபி கூட இல்லாமல் வங்கி கணக்கில் இருந்து இந்த மோசடி கும்பலானது பணத்தை திருடி வருகின்றது.
அது மட்டுமில்லாமல் முகநூலில் அதாவது ஃபேஸ்புக்கில் நமது நண்பர்களின் புகைப்படங்களையும் குறிப்புகளையும் எடுத்து போலி கணக்குகளை உருவாக்கி நமது நண்பர்கள் போலவே பேசி நம்மிடம் இருந்து பணத்தை திருடி வரும் சம்பவங்களும் அதிகம் நடந்து வருகின்றது. இந்த மாதிரியான சம்பவங்கள் குறித்து அதிக விழிப்புணர்வு இருந்தாலும் சில நேரங்களில் அதை நாம் மறந்து விடுகிறோம்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரில் பேஸ்புக்கில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி கணக்கின் மூலமாக 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி குறித்து ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் அவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 2 கோடி ரூபாய் வசூல் செய்த அந்த கும்பல் குலுக்கல் முறையில் 200 பேருக்கு பரிசு தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.