சமையலறையில் நடமாடும் கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த.. நான்கு பல் பூண்டு போதும்!!

0
93

வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு கரப்பான் பூச்சியின் ஆட்டத்தை அடக்கலாம்.கடைகளில் விற்கும் இரசாயன பொருட்களுக்கு பதில் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கலாம்.

தீர்வு 01:

முதலில் தங்களுக்கு தேவையான அளவு வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இந்த ஸ்பிரேயரை கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் தெளித்தால் பூண்டு வாடைக்கு அவற்றின் தொல்லை கட்டுப்படும்.

தீர்வு 02:

சூடம் அதாவது கற்பூரத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கரையவிட்டு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள பகுதியை ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை கட்டுப்படும்.

தீர்வு 03:

பத்து முதல் பதினைந்து கிராம்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த கிராம்பு தூளை கிச்சன்,கழிவறை உள்ளிட்ட இடங்களில் தூவினால் கரப்பான் பூச்சி தொல்லை ஒழியும்.

தீர்வு 04:

ஒரு வேஸ்ட் பாட்டிலில் ஒரு தேக்கரண்டி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும்.

தீர்வு 05:

நாட்டு மருந்து கடையில் விற்கும் நீலகிரி தைலம் வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த தைலம் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

இதை வீட்டின் மூலை முடுக்கில் ஸ்ப்ரே செய்தால் கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படும்.

மேலும் வீட்டில் அழுகிய பொருட்கள் உடனடியாக வெளியேற்றிவிடுங்கள்.சமைத்த பிறகு கிச்சனை சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.அடுப்பு,ஜிங்க் உள்ளிட்ட பகுதியை எலுமிச்சை நீர் கொண்டு துடைத்தால் கரப்பான் பூச்சி நடமாட்டம் கட்டுப்படும்.