பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலார்ட்!
சமீப காலமாக பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததையொட்டி மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டது.
இதனையடுத்து தற்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம்,திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் சென்னை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல அந்த மாவட்டங்களில் ஏற்படும் பேரிடர்களுக்கு ஏற்ப மீட்பு பணி கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கனமழையானது இன்று ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் இன்று மட்டுமே விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளனர்.நாளை இது போல காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று கனமழை இருக்க நேர்ந்தால், கட்டாயம் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுப்பு அளிக்கப்படலாம் என்று கூறுகின்றனர்.
அந்த வகையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என்றும், மாண்டஸ் புயல் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் கனமழை இருக்குமாயின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நான்குநாட்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுப்பு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.