இந்த பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை! மகிழ்ச்சியில் மாணவர்கள்!
தொற்று பாதிப்பு குறைந்து தற்பொழுது தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டுள்ளது.9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.இவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பாடங்களை பயில்கின்றனர்.அதனையடுத்து 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என பேச்சுவார்த்தை நடந்து வந்தது.பல ஆலோசனைகள் நடந்த பிறகு நவம்பர் 1 ஆம் தேதி முதல், 1 ம் வகுப்பு மாணவர்கள் முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதனையடுத்த பள்ளி திறக்கும் தேதியடுத்து மூன்று நாட்களில் தீபாவளி பண்டிகை வருகிறது.
அதனால் பண்டிகை நாள் முடிந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என பெற்றோர்கள் கூறினர்.ஆனால் அரசோ அதனை மறுத்து அறிவித்த தேதியில் பள்ளிகள் திறக்கபப்டும் என தெரிவித்தனர்.அதுமட்டுமின்றி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என கூறினர்.நேற்று திருச்சி மணப்பாறை அருகே நடைபெற்ற பரப்புரையில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்பாளரை ஆதரித்து பேசினார்.பரப்புரையை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் 1 ம் வகுப்பு மாணவர்களின் உடன் வகுப்பறையில் பெற்றோர்கள் இருக்கலாம் என்று கூறினார்.
ஏனென்றால் குழந்தைகள் அதிக நேரம் முகக்கவசம் அணிந்து இருக்க மாட்டர்கள் என்பதால் அவர்களை கவனிக்க பெற்றோர்கள் இருக்கலாம் என்று கூறினார்.அதுமட்டுமின்றி மாணவர்களுடம் இருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.இவ்வாறு சிறு வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கும் நேரத்தில் உயர்கல்வி வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.அந்தவகையில் திருவாரூர் அருகே கொட்டாரக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.அதனைப்போலவே மன்னார்குடியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதனால் இந்த இரு பள்ளிகளுக்கும் 4 நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.