Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலி வரப்போவதை நமக்கு முன்கூட்டியே காட்டி கொடுக்கும் நான்கு அறிகுறிகள்!!

முதுமை காலத்தை அடைந்த பிறகு நாம் பல்வேறு உடல் நலக் கோளாறுகளை சந்திக்கின்றோம்.குறிப்பாக எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகமாவே சந்திக்க நேரிடுகிறது.எலும்பு தேய்மானம்,குருத்தெலும்பு தேய்மானத்தால் மூட்டு வலி,முழங்கால் வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் திடீரென்று நமக்கு வருவதில்லை.சில அறிகுறிகள் நமக்கு முன்கூட்டியே உணர்த்திவிடும்.நாம் அதை கவனிக்காததால் பின்னாளில் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.

மூட்டு வலிக்கான காரணங்கள்:

1)உடல் எடை அதிகரிப்பு
2)வயது முதுமை
3)முடக்கு வாதம்
4) எலும்புரை பாதிப்பு
5)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
6)குருத்தெலும்பு தேய்மானம்

மூட்டு வலி வரப்போவதை உணர்த்தும் நான்குஸ்டேஜ்:

1)மாடிப்படி ஏறும் போது மூட்டு பகுதியில் கடுமையான வலி மற்றும் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படும்.இதை மூட்டு வலிக்கான முதல் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.இந்த ஸ்டேஜில் இருப்பவர்கள் மூட்டு பகுதியில் எண்ணெய் அல்லது தைலம் தேய்த்து வலியை குறைக்கலாம்.அதேபோல் சூடு தண்ணீர் ஒத்தடம் கொடுத்தல் வலி குறையும்.இந்த ஆரம்ப அறிகுறி 30 அல்லது 35 வயதினருக்கு ஏற்படலாம்.

மூட்டு பகுதியில் வலி வராமல் இருக்க வாக்கிங்,ஜாகிங்,சைக்கிளிங் பயிற்சிகளில் தினமும் ஈடுபட வேண்டும்.

2)மூட்டு வலியின் இரண்டாவது நிலை என்பது வலியுடன் மூட்டு பகுதியில் வீக்கம் ஏற்படுதல்.இந்த அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுகி ஸ்கேன் செய்து கொடுக்கும் மருந்து மாத்திரையை உட்கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும்.

3)மூட்டு வலியின் மூன்றாவது நிலை என்பது வழக்கத்தைவிட நடப்பதில் சிரமம் ஏற்படுதல்.கால்கள் வளைவான கோணத்திற்கு மாறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இந்த ஸ்டேஜில் இருப்பவர்கள் ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

4)மூட்டு வலியின் நான்காவது நிலை என்பது மூட்டு எலும்புகளின் கோணல் மாறுதல்,சிறிது நேரம் கூட நடக்க முடியாத நிலை,இரவு நேரத்தில் அதிக மூட்டு வலி பிரச்சனை போன்றவை ஏற்படலாம்.இந்த நிலையில் இருப்பவர்கள் நிச்சயம் அறுவகை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

மூட்டுகளை வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டிய விசயங்கள்:

**ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.எலும்பு வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

**கால்சியம் சத்து நிறைந்த பால்,முட்டை,காய்கறிகள் மற்றும் கீரைகளை உட்கொள்ள வேண்டும்.

**மூட்டுகளுக்கு வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.மூட்டு தலைங்களை பயன்படுத்தி வலியை குறைக்கலாம்.

Exit mobile version