பொடுகை போக்கும் நான்கு வீட்டு வைத்தியங்கள்!! உடனே ட்ரை பண்ணி பாருங்க!!

0
77
Four home remedies to get rid of dandruff!! Try it immediately!!

இன்று பலரும் பொடுகு தொல்லையால் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் முடி உதிர்வு,தலையில் இருந்து துர்நாற்றம் வீசுதல்,தலை அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.இதற்கு வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு எளிதில் தீர்வு காணலாம்.

1)வேப்பம் பூ
2)ஆவாரம் பூ

ஒரு கப் வேப்பம் பூ மற்றும் ஒரு கப் ஆவாரம் பூவை ஒரு நாள் முழுவதும் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு தண்ணீர் விட்டு மைய்ய அரைக்கவும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஊறவிடவும்.அதன் பிறகு நல்ல நீரில் முடியை அலசி சுத்தம் செய்யவும்.இப்படி வாரத்திற்கு இருமுறை தலை கழுவினால் பொடுகு மற்றும் பேன் தொல்லைக்கு முடிவு கிடைக்கும்.

1)மிளகு
2)நல்லெண்ணெய்

அடுப்பில் பாத்திரம் வைத்து 250 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும்.எண்ணெய் சூடானதும் 10 கருப்பு மிளகு சேர்த்து குறைவான தீயில் காய்ச்சவும்.பிறகு எண்ணையை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வந்தால் பொடுகு அடியோடு நீங்கிவிடும்.

1)வெந்தயக் கீரை

முதலில் ஒரு கப் அளவிற்கு வெந்தயக் கீரை எடுத்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பிறகு இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்கு அலசி சுத்தம் செய்யவும்.இந்த முறையை பின்பற்றினால் தலையில் உள்ள பொடுகு முழுமையாக நீங்கும்.

1)வேப்பங்கொட்டை

ஒரு கைப்பிடி வேப்பங்கொட்டை நீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது
மூன்று முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.