தமிழகத்தில் உருவாகயிருக்கும் நான்கு புதிய மாநகராட்சிகள்!
தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியீட்டுள்ளார்.
விரைவில் நகரமயமாகி வரும் நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றை இணைந்து புதிய மாநகராட்சிகளாக உருவாக்கப்பட்டு வருகிறது.
நகர்புற தன்மை வாய்ந்த விரைவில் நகரமயமாகி வரும் பகுதிகளுக்கு நகரங்களில் உள்ளவாறு விரைந்த குடிநீர், மேம்படுத்தப்பட்ட சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்கோடு உருவாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக 28 நகராட்சிகள் மற்றும் ஆறு மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டமாக நிதி ஒதுக்கி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்பொழுது திருவண்ணாமலை நகராட்சியில் 18 ஊராட்சிகளை இணைத்து, புதுக்கோட்டையில் 11 ஊராட்சிகளை இணைத்து, நாமக்கலில் 12 ஊராட்சிகளை இணைத்து, காரைக்குடி நகராட்சியுடன் 2 பேரூராட்சி மற்றும் 5 ஊராட்சியை இணைத்து மாநகராட்சியாகவும் மொத்தம் நான்கு மாநகராட்சிகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.