நான்கு மிளகு இருந்தாலே போதும்!! தொண்டை கட்டலுக்கு நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

0
88
Four pepper is enough!! Sore Throat Remedy in Minutes!!

அதிகப்படியான சளி மற்றும் தொடர் இருமல் காரணமாக தொண்டை பகுதியில் கரகரப்பு,தொண்டை கட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

தொண்டை கட்டல் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் பொழுது பேசுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் இந்த தொண்டை கட்டல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.

தொண்டை பகுதியில் கிருமிகள் அதிகம் சேர்வதால் தான் கரகரப்பு,பேசுவதில் சிரமம் போன்றவை நிகழ்கிறது.எனவே தொண்டை பகுதியில் உள்ள கிருமி தொற்றுகள் அழிய கீழ்கண்ட வீட்டு மருத்துவ குறிப்புகளில் ஒன்றை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

1)கரு மிளகு
2)தேன்

ஒரு தேக்கரண்டி கரு மிளகை கொரகொரப்பாக இடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டல் சரியாகும்.

1)பால்
2)சமையல் மஞ்சள் பொடி

ஒரு கிளாஸ் சூடான பாலில் அரை தேக்கரண்டி சமையல் மஞ்சள் பொடி கலந்து பருகினால் தொண்டை கட்டல் சரியாகும்.

1)பூண்டு
2)சீரகம்
3)மஞ்சள்

ஒன்றரை கிளாஸ் நீரில் இரண்டு பல் இடித்த பூண்டு,கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் தொண்டை கட்டல் குணமாகும்.

1)சுக்கு
2)திப்பிலி
3)அதிமதுரம்

இந்த மூன்று பொருட்களையும் பொடித்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகி வந்தால் தொண்டை கட்டல் குணமாகும்.

1)துளசி
2)புதினா இலை

ஒரு கப் நீரில் 10 துளசி இலைகள் மற்றும் 10 புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் தொண்டை கட்டல் குணமாகும்.

1)இஞ்சி
2)ஹனி

இஞ்சி சாறை பாத்திரத்தில் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருகினால் தொண்டை கரகரப்பு,தொண்டை கட்டல் குணமாகும்.