புதுச்சேரியில் மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற நான்கு வாலிபர்கள் கைது!

0
160
#image_title

புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நள்ளிரவில் மது போதையில் சிகிச்சை பெறுவது போல் வந்து மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற நான்கு வாலிபர்களை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலமாக அடையாளம் கண்ட போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 23-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் காலில் அடிப்பட்டு காயம் என்று சொல்லி நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களுக்கு அப்போது பணியில் இருந்த செவிலியர் நில்மலா தேவி மற்றும் பணியாளர் அலமேலு ஆகியோர் காலில் கட்டு போட்டு மருந்து மாத்திரை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

அப்போது அவர்கள் வெளியில் செல்லும் போது அங்கு இருந்த ஸ்டெதாஸ்கோப்,
பிபி பரிசோதிக்கும் கருவி, மருந்து அறையின் கொத்து சாவி மற்றும் கேட்டில் இருந்த பூட்டு ஆகியவைகளை திருடிச் சென்றனர். இதனால் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் விபத்து சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இது தொடர்பாக மருத்துவ அதிகாரி தரணி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 4-வாலிபர்கள் இரண்டு இருசக்கர வாகனத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் வருவதும்.

பின்னர் உள்ளே செல்லும் அவர்கள் ஒருவருக்கு காலில் கட்டு போட்டு கொண்டு மருத்துவ உபகரணங்களை எடுத்து செல்வதும் பதிவாகி இருந்ததை அடுத்து வாகன என்னை கொண்டு திருட்டில் ஈடுப்பட்ட அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்த கணபதி (28) என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில்.

மது அருந்தி விட்டு காலில் கட்டு போட சென்ற போது மது போதையில் அவரது நன்பர்களான மணிகண்டன், பிரகாஷ், மற்றும் அவரது தம்பி பிரசாந்த ஆகியோருடன் திருட்டில் ஈடுப்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.