Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!

புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!

 

மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாலகுரு.இவருக்கு வயது (26).இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் பேஸ்புக் இணையத்தின் மூலம் மீரா என்ற பெண்ணிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இவர்களது நட்பு காதலில் முடிந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2019ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

 

சில மாதங்களுக்கு பிறகு மீராவின் வேஷம் கலைந்துவிட்டது. அவரது நிஜ பெயர் ராஜபுஷ்பா. இவர் மேட்டுப்பாளயத்தை சேர்ந்த சகாயத்தின் பெண் என்று தெரிய வந்தது.காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள் அதுபோல பாலகுருவின் காதல் அவரது கண்ணையே மறைத்து விட்டது. அவரது மனைவி கூறிய பொய் அவருக்கு பெரிதாக தென்படவில்லை.

 

இதைத்தொடர்ந்து பாலகுரு டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வார். அப்படி அவர் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது வீட்டுக்கு வேறு ஆண்களை அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பாலகுருவிடம் முறையிட்டுள்ளனர்.

 

அதன்பின் பாலகுருவிற்கும் அவரது மனைவி ராஜபுஷ்பாவிற்கும் இடையே சண்டை நிலவியது.சண்டையில் அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறி

சென்ற ராஜபுஷ்பா வெகு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை.

 

அதன்பின் விசாரித்த பாலகுருவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ராஜபுஷ்பா என்பவர் மூன்று திருமணங்கள் செய்த நிலையில் என்னை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது அவர் மூன்றாவதாக திருமணம் செய்த திண்டுக்கல் பார்த்திபனுடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்தது.

இதையடுத்து பாலகுருவின் வீட்டில் இருந்து 1 பவுன் மற்றும் 70 ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றுள்ளார். இதப்பற்றி அவரது அம்மா மும்தாஜ்யிடம் கேட்கும் போது என் மகள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்வால் நீ விலகிக்கொள் என்று கூறியுள்ளார்.

இவர் கூறிய பதிலால் மிகுந்த கோவமடைந்த பாலகுரு மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் புகார் அளித்தார்.அவரது புகாரில் தன்னை போல் யாரும் இவளது வலையில் விளக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version