Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மணக்கும் கோவில் ஸ்டைல் புளியோதரை!! இப்படி செய்யுங்க மக்களே.. அசல் சுவை கிடைக்கும்!!

#image_title

மணக்கும் கோவில் ஸ்டைல் புளியோதரை!! இப்படி செய்யுங்க மக்களே.. அசல் சுவை கிடைக்கும்!!

நம்மில் பலருக்கு கோவிலில் வழங்கப்படும் புளியோதரை,எலுமிச்சை சாதம்,தயிர் சாதம் என்றால்அலாதி பிரியம்.கோவிலில் தரப்படும் பிரசாதம் மட்டும் எப்படி இவ்வளவு ருசியாக இருக்கிறது என்று பலரும் நினைத்திருப்போம்.இப்படி கோவில் பிரசாதத்தை நினைக்கும் போதே வாயில் எச்சில் ஊரும் நிலையில் அவற்றை வீட்டில் செய்ய தெரிந்தால் எப்படி இருக்கும்? இத்தனை நாள் நாம் கோவிலில் வாங்கி சுவைத்து வந்த புளியோதரையை அதே சுவையில் செய்யும் ரகசியம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*வர மிளகாய் – 6

*கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

*உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

*வறுத்த வேர்க்கடலை – 1 கைப்பிடி

*முந்திரி பருப்பு – 10

*கருவேப்பிலை – 1 கொத்து

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

1)பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு புளியைபோட்டு ஊற வைக்கவும்.பின்னர் அதை கரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

2)புளியோதரை செய்ய தேவையான அளவு சாதத்தை உதிர் உதிராக வடித்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும்.ளியோதரைக்கு சாதம் குழையாமல் வடிக்க வேண்டும்.

3)அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றவும்.எண்ணெய் சூடேறியதும் அதில் கடுகு 1 தேக்கரண்டி,6 வர மிளகாய்,கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு 1 தேக்கரண்டி போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.இதனை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.இவை நன்கு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

4)அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுத்த வேர்க்கடலை 1 கைப்பிடி அளவு,10 முதல் 12 முந்திரி பருப்பு, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.அதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

5)அடுத்து அதே கடாயில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும்.அதனுடன் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,காரத்திற்கேற்ப மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிண்டவும்.பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து புளிக்கரைசலை கொதிக்க விடவும்.அரைத்து பொடி செய்து வைத்துள்ள கலவையை அதில் போட்டு கொதிக்க விடவும்.இந்த கரைசல் தொக்கு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பிறகு வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கி விடவும்.

6)ஆறவைத்துள்ள சாதத்தில் தயார் செய்து வைத்துள்ள புளி தொக்கை சேர்த்து மெதுவாக கிளறவும்.

Exit mobile version