Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்ந்து 2வது முறையாக அதிபராக தேர்வானார் இமானுவேல் மேக்ரான்! உலகத் தலைவர்கள் வாழ்த்து!

பிரான்ஸ் அதிபராக இருந்து வரும் இமானுவேல் மெக்ரானின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 12வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு 2 சுற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் மையங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நதாலி ஆர்தாட்,நிக்கோலஸ் டுபாண்ட், ஆன் ஹிடால்கோ,யானிக்ஜடோட்,ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உட்பட 12 பேர் களமிறங்கினார்கள்.

அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலமாக அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

இதனடிப்படையில் பிரான்சில் முதல் சுற்று அதிபர் தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடந்தது 6.90 கோடி வாக்காளர்கள் சஜ்ஜளிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணியளவில் ஆரம்பமான வாக்குப்பதிவில் மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுடைய ஜனநாயக கடமையை செய்து முடித்தார்கள்.

வலதுசாரி வேட்பாளரும் பெண் வழக்கறிஞருமான மரைன் லு பென்னுக்குமிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 2வது கட்ட தேர்தல் நேற்று நடந்தது காலை முதல் மாலை வரையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது, வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.

அதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் 58 சதவீதம் வாக்குகள் பெற்று மறுபடியும் அதிபராக பதவியேற்கவுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லூ பென் 42 சதவீதம் வாக்குகள் பெற்றார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இமானுவேல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அத்துடன் இவர் கடந்த 2017ஆம் வருடம் முதல் பிரான்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது.

இந்த சூழ்நிலையில், அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் அவர் வெற்றி வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version