Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி! அரசு ஆசிரியர்  எடுத்த விபரீத முடிவு! 

#image_title

பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி! அரசு ஆசிரியர்  எடுத்த விபரீத முடிவு! 

பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் மனமுடைந்த அரசு பள்ளி ஆசிரியர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.

பரபரப்பான இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு ஆசிரியரிடம் 8 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் மனம் உடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொம்மிடியை அடுத்துள்ள பி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் அருண் பிரசாத். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் இருந்து மதியம் வீடு திரும்பிய அருண் பிரசாத், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொம்மிடி போலீசார், அருண் பிரசாத்தின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய சோதனையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் அருண் பிரசாத் எழுதிய 12 பக்க கடிதம் சிக்கி உள்ளது. அதில் அவர் தனது தற்கொலைக்கு காரணம் தனக்கு வீட்டு மனை நிலமற்ற நாமக்காரர் என்கிற சிவசங்கர் குடும்பத்தினர் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் அருகே இருந்த மற்றொரு நிலத்தை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தி சிவசங்கர் 8 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு நிலத்தை தராமல் மிரட்டி வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் சிவசங்கர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த  பொம்மிடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version