Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி!

#image_title

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி தம்பதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி; மந்திரவாதி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்தமனைவி சிந்துஜா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கணகாணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், தனக்கும், வெள்ளிச்சந்தை கல்லடி விளையைச் சேர்ந்த சைஜூ மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் வாஸ்து பூஜை மற்றும் பரிகார பூஜை செய்து வருவதாக தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்த தம்பதியர் திருவனந்தபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் வட்டி மூலமாக அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்ததால் அதை நம்பி மூன்றரை இலட்ச ரூபாய் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் முதலீடு செய்து பல மாதங்கள் ஆன பிறகும் வட்டி தராததோடு, முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை எனவும் அதோடு சைஜூ மற்றும் வனிதாவையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் திருவனந்தபுரம் சென்று விசாரித்த போது அப்படி நிதி நிறுவனம் இல்லை என்றும் நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி 2 பேரும் சேர்ந்து எங்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரிய வந்ததால் அவர்கள் மீது நபவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சைஜூவும், வனிதாவும் சேர்ந்து பணம் வாங்கி மோசடி செய்ததும், மாந்திரீக பூஜைகள் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சைஜூ மற்றும் வனிதா ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் சைஜூவை கைது செய்தனர்.

Exit mobile version