Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!!

#image_title

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!!

நான் முதல்வர் திட்டத்தின் கீழ்  மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு மாவட்டங்கள் தோறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அரசு பணியை தங்கள் கனவாகக் கொண்டு நிறைய இளைஞர்கள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு படித்து தயாராகி வருகின்றனர். தனியார் நிறுவனங்களை நம்பி காலத்தை ஓட்ட முடியாது, நிரந்தர வேலை நிரந்தர வருமானம் வேண்டும் என்பதற்காக நிறைய பேர் அரசு வேலையை நம்பி இருக்கின்றனர். இதனால் போட்டித் தேர்வுகளை அரசு நேர்மையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விழுந்துள்ளது.

தனியார் பயிற்சி நிறுவனங்கள் :-

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் லட்சக்கணக்கானோரை குறிவைத்து பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அவர்கள் ஒருவரிடம் ஆயிரக்கணக்கில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் கூட பயிற்சி கட்டணமாக பெறுகின்றனர். மொத்தமாக ஒரு ஆண்டுக்கு பல கோடி வருமானமும் இந்த பயிற்சி மையத்தின் வழியாக கிடைக்கிறது. பணத்தை மட்டும் முதன்மையாக கொண்டு செயல்படுவதாக புகார்களும் கூறப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிது, புதிதாக தனியார் பயிற்சி மையங்கள் உருவாகிக் கொண்டே வருகிறது. அவர்கள் லட்சக்கணக்கில் லாபம் பார்த்து வருகின்றனர். ஒரிரு தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களை தங்கள் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்க வைத்து லாபம் பார்க்கின்றனர்.

நான் முதல்வன் திட்டம் என்னும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு மாவட்டங்கள் தோறும் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்நிலையில் மாவட்டங்கள் தோறும் செயல்படும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வங்கி ssc உள்ளிட்ட மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கு தேர்வு நினைப்பவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஏழை எளிய மாணவர்கள் இளைஞர்கள் பயன்பெறும் விதமாக மே மாதம் 25ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகிறது. அதோடு இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விருப்பம் கொண்ட மாணவர்கள் http://candidate.tnskill.tn.gov.in/CENM/TNSDC_REGISTRATION.ASPX என்ற இணையதளத்தில் பயன்பெறலாம்
என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவசமாக பயிற்சி பெற்று மத்திய அரசின் காலி பணியிடங்களை தமிழர்கள் நிரப்பு வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Exit mobile version