Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

free-coaching-course-for-upsc-exam-tamil-nadu-government-announcement-apply-from-today

free-coaching-course-for-upsc-exam-tamil-nadu-government-announcement-apply-from-today

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு நடத்தும் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. அரசு தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர விருப்பமுள்ளர்கள் https://civilservicecoaching.com என்ற இணையதளத்தில் இன்று முதல் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இங்கு தங்குவதற்கு இடவசதி மற்றும் உணவு முழுவது‌ம் இலவசம். மேலும் படிப்பதற்கு உதவியாக நூலகம் உள்ளது. இங்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வருகிற நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version