Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை குடிசைவாழ் மக்களுக்கு நாளை முதல் இலவச உணவு! முதல்வர் அதிரடி அறிவிப்பு!

சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13ம் தேதி வரை இலவச உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு இலவச உணவு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி, சென்னையில் சுமார் 5.3 லட்சம் குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில், மொத்தம் 26 லட்சம் மக்களுக்கு நாளை முதல் இலவச உணவளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது. நாளை காலை உணவு தொடங்கி, டிசம்பர் 13ம் தேதி இரவு வரை குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமுதாய நலக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் குடிசைப் பகுதி மக்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கவிருக்கிறது சென்னை மாநகராட்சி.

Exit mobile version