Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசு தொடங்கி வைத்த அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பாதையை தண்ணியடித்துவிட்டு பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டு அது செயலில் இருந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற மருத்துவமனைகளில் நோய்த்தொற்று பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு மற்றும் சிகிச்சை படுக்கை வசதிகள் ஆக்சிஜன் தேவை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும், அதோடு மருத்துவமனையில் பணிபுரியும்
முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளை கவனிப்பதற்காக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்றைய தினம் தொடங்கி வைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோய்க்கு உள்ளானவர்களுக்கு உதவியாக இருப்போருக்கும் மற்றும் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை காண வருபவர்களுக்கு 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தனியார் அமைப்பு மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதே போல தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக மாநில அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கட்சியின் சார்பாக நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி உங்களுடைய கட்சியை சார்ந்தவர்கள் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள். எங்களுடைய ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பித்துக் கொள்ள இயலாது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு இன்று மாலை ஸ்ரீரங்கம் ஜீயர் தேர்வு குறித்து இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version