இலவசம் இலவசம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
மத்திய அரசு ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வரும் நிலையில் பிப்ரவரி மாதம் மட்டும் இரண்டு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். எனவே தற்பொழுது ஹோலி பண்டிகை வருவதையொட்டி அதற்கு முன்னதாகவே இரண்டாவது முறையாக இலவச ரேஷன் பொருள் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
அந்த வகையில் NFSA மாதம் இருபதாம் தேதி முதல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்த இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடங்கிவிட்ட நிலையில் மற்ற மாநிலங்களில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
அது மட்டும் இன்றி கடந்த ஆண்டு முதல் இவ்வாறு விநியோகம் செய்யப்படும் ரேஷன் பொருள்கள் ஆனது ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் தாமதமாக வழங்கப்பட்டு வருவதால் தற்பொழுது முறையாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிப்ரவரி மாதமே இந்த இலவச ரேஷன் பொருட்களை மீண்டும் வழங்க உள்ளனர். அவ்வாறு பிப்ரவரி மாதத்திற்கானது இம்முறை வழங்கப்பட்டு விட்டால் மார்ச் மாதத்தில் இருந்து சீரான முறையில் அந்தந்த மதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது