Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏழைகள் இல்லாத தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம்! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

தமிழ்நாட்டிலே வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்திருக்கிறார். அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த தினம் நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. அதேபோன்று சென்னை அசோக் நகரில் அதிமுகவின் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் நடந்தது அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றினார்.

அந்த சமயத்தில் அவர் பேசியதாவது, ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த சமயத்தில் எந்த ஒரு பணியையும் செய்யவில்லை இப்பொழுது வேண்டுமென்றே அதிமுகவின் நலத்திட்டங்களை குறை கூறி வருகின்றார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதனை செயலுக்குக் கொண்டு வந்ததே அவர்கள்தான் மக்களை குழப்பி அதில் அரசியல் செய்ய பார்க்கும் ஸ்டாலின் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.

சென்னையிலே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, மேம்பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் திட்டம் மூலமாக வண்ணாரப்பேட்டை, விம்கோ நகர் இடையிலான ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி விரைவாக தொடங்கி வைக்க இருக்கிறார். தமிழ்நாட்டிலே ஏழை மக்கள் இல்லாத நிலையை அதிமுக அரசு ஏற்படுத்தி வருகிறது.

மறுபடியும் அதிமுக ஆட்சி அமைக்கும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏழை மக்கள் அனைவருக்கும் அதிமுக அரசு வீடு கட்டித்தரும் ஐந்து வருடங்களில் வீடு இல்லாத குடும்பங்கள் இல்லை என்ற நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

Exit mobile version