Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலைஞர் டிவி…..!! அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் 2006-11ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது,பொது மக்கள் அனைவருக்கும் இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டன. இலவச கலர் டிவிவழங்கும் திட்டத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் இருந்ததாக செய்திகள் வெளிவருகின்றன.அந்தந்த மாவட்டங்களில் உள்ள குடோன்களில் பல ஆயிரம் டிவிக்கள் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள குடோன்களில் பாதுகாக்கப்பட்ட கலைஞர் டிவிக்கள் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழங்கி வருவதாகவும்
அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், திருச்சி தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று கலைஞர் டிவிக்களை பெற்றுக் கொள்வதாகவும் செய்திகள் கூறப்படுகிறது.

கல்வித்துறை வட்டாரத்தில் கேட்டபோது வீணாக போகக் கூடாது என்ற நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும், தலைமை ஆசிரியர்களை கேட்க்கும் போது இப்போ எதற்கு டிவி கொடுக்குறாங்கன்னு தெரியவில்லை என்றும், டிவி எல்லாம் பழுதடைந்த நிலையில் உள்ளது,இவை ஒர்க் ஆகுமா என்றும் தெரியவில்லை என கூறுகின்றனர்.

தி.மு.க.ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட டிவிக்களை கிட்டத்தட்ட10 ஆண்டுகள் கிடப்பில் வைத்து தற்போது தர வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தற்போது எழுந்துள்ளது.

Exit mobile version