அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்!! வெளியான அறிவிப்பு!!
சமுக வலை தளங்களில் உங்களுக்கு இலவச ரீசார்ஜ் அல்லது இலவச டேட்டா போன்ற மெசேஜ்கள் அனவருக்கும் வரும். இது உண்மையில்லை என்று தெரிந்தாலும் நம் மனதின் ஆசை அதை செய்ய தூண்டும். அது போன்று தற்போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற செய்து வாட்ஸ் அப் மூலமாக பரவி வருகிறது.
அந்த மெசேஜை கிளிக் செய்தால் 5 வாட்ஸ் அப் குரூப்களுக்கு அல்லது 20 நபர்களுக்கு இந்த மெசேஜை அனுப்புங்கள் என வருகிறது. அதில் உள்ள கமென்ட்ஸ்களில் நான் இது போல செய்தேன் எனக்கு லேப்டாப் வந்து விட்டது போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளது.
நாமும் இதை நம்பி இந்த செய்தியை எத்தனை பேருக்கு அனுப்பினாலும் இன்னும் 2 குரூப்களுக்கு அல்லது 5 நபர்களுக்கு அனுப்புங்கள் என வருகிறது. ஆனால் இந்த செய்தி உண்மையில்லை. மத்திய அரசு இது போன்ற எந்த திட்டத்தையும் தொடங்கவில்லை. அதற்கான அறிவிப்புகளும் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் இந்த அறிவிப்பு போலியானது இது போன்ற எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. இது போன்று வரும் தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாந்து பணத்தை இழக்க வேண்டாம் என PIBFactCheck விளக்கம் அளித்துள்ளது.