DMK: அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு ஒன்றரை ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் திமுகவானது தற்பொழுது திட்டங்கள் சார்ந்த அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் முதலில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கி வந்த உதவித்தொகையானது இனி அனைத்து மகளிருக்கும் குடும்ப அட்டையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்தனர். அத்தோடு இனி புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் உதவித்தொகை கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
மேற்கொண்டு நான்கு ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்காமலிருந்த மடிக்கணினி குறித்து இந்த வருடம் கட்டாயம் அறிவிப்பானது வரும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து பல விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது அதனையெல்லாம் மறைக்க மக்களுக்கு ஏற்ற பல நலத்திட்டங்கள் சமீப காலமாக செயல்படுத்தி வருகின்றனர்.
அதில் மாணவர்களுக்கு மடிக்கணினி இந்த வருடம் கட்டாயம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருடந்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி குறித்த கேள்விக்கு சரிவர பள்ளிக் கல்வித்துறை பதிலளித்ததில்லை. தற்சமயம் தேர்தல் வருகையையொட்டி இவ்வாறான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.
நான்கு ஆண்டுகள் அவர்கள் மேலிருந்த பழி சுமையை நீக்க இவ்வாறான முயற்சிகளை எடுப்பதாக அறிவாலயம் சுற்று வட்டாரங்கள் கூறி வருகின்றது.