Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இலவச லேப்டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட-அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2020-21ம் ஆண்டில் 11ஆம் வகுப்பு படித்த 4,97,028 மாணவர்களுக்கு தர வேண்டிய இலவச லேப்டாப்கள் இன்னும் மாணவர்களுக்கு தரப்படவில்லை. மேலும் 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், சேலம், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே விலையில்லா மடிக்கணினிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மற்ற மாவட்டங்களில் பயின்ற மாணவர்களில் தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பயிலும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் அத்தாட்சி அடிப்படையில் இலவச லேப்டாப்கள் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2020-21ம் ஆண்டில் 11ஆம் வகுப்பு படித்த 4,97,028 மாணவர்களுக்கும் இன்னும் இலவச லேப்டாப்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மீதமுள்ள மாணவர்களுக்கு எப்பொழுது இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத மாணவர்களுக்கும் விரைவில் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், 1.75லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version