முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
138

முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா தொற்றின் தீவிர பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு கொரோனா தடுப்பு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டு, உள்நாட்டு விமான சேவை மட்டும் நடைபெற்று வந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு மத்தியில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வந்த சமயத்தில் அதன் உருமாற்றமான டெல்டா வகை கொரோனா நாடெங்கும் அதிவேகமாக பரவி வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுபாடுகள் நாடெங்கும் கடுமையாக்கப்பட்டன. அதன்பின் அது கட்டுக்குள் வரத் தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்திற்குள் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவியது. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இது இந்தியாவிலும் பரவியது. இதனால் நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலை உருவானது.

இந்நிலையில் நாட்டில் நிலவி வந்த கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேலும் கொரோனாவின் பாதிப்பும் குறைந்து கொண்டு வருகிறது. இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நேற்று முதல் சர்வதேச விமான சேவை தொடங்கியது. இதற்கிடையே ஐந்து லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுற்றுலாதுறை இணை மந்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதலில் வரும் ஐந்து லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச விசா வழங்கப்படும் என்று அவர் கூறினார்.