ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

0
205
Free ride if in school uniform!! Transport department new order for conductors!!

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. கோடையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பை வருகிற 7ஆம் தேதி தள்ளி வைக்க பல்வேறு தரப்பிலிருந்தும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும் பாடப்புத்தகங்கள் விநியோகிப்பது, சீருடைகள் வழங்குவது, பஸ் பாஸ், பள்ளிகளில் தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் ‘ஸ்மார்ட் கார்டு  வருகிற ஜூன் அல்லது ஜூலை மாத இறுதியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது ‘கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்யலாம். சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டாலோ நடத்துனர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.