Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்! பிரபல நடிகரின் புதிய செயல்!!

#image_title

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்! பிரபல நடிகரின் புதிய செயல்!

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் அறிவித்துள்ளார்.

நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பிச்சைக்காரன்2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பல நலத்திட்டங்களை செய்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் தற்பொழுது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது புற்றுநோய்க்கு உதவி தேவைப்படுபவர்கள் தன்னை தாரளமாக அழைக்கலாம் என்று கூறியுள்ளார். புற்றுநௌய் சிகிச்சை பெறுபவர்கள் உதவிக்கு  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் ஆந்திராவில் உள்ள ஜி.எஸ்.எல் மருத்துவமனையுடன் சேர்ந்து இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

Exit mobile version