Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த திட்டத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை பெயர் வைக்க வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!!

Freedom fighter should be named for this project!! Anbumani Ramadoss request!!

Freedom fighter should be named for this project!! Anbumani Ramadoss request!!

கடலூரில் இப்போது புதிதாக துறைமுகம் அமைக்க கடல் சார்ந்த வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்ததனால் தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதை மகிழ்ச்சியடைந்தனர். மேலும் புதிய துறைமுகத்தை அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிதாக அமைக்கப்படவுள்ள துறைமுகத்திற்கு கடலூரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும். அதுதான் அவருக்கு தமிழக அரசு அவருக்கு செய்யப்படும் மரியாதை  என்று அவர் கூறியிருந்தார். கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். ஆனால் ஒரு போதும் ஆங்கிலேயர்களை கண்டு அச்சம் மற்றும் பயந்தது இல்லை. மேலும் அவர் தான் வயிற்றில் மகனை சுமந்த நிலையில் போராட்டத்தில் போராடி சிறைக்கு சென்றவர் அஞ்சலையம்மாள் அவர்.

மேலும் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் மகப்பேறு முடிந்த சில நாட்களில் திரும்பவும் போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பவும் கை குழந்தைவுடன் சிறைக்கு சென்றார். இந்த சம்பவம்கள் கண்டு காந்தியடிகள் வையந்தார். மேலும் அவருடன் சேர்ந்தது  உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல்போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல ஆண்டுகள் சிறைக்கு சென்று வந்த்துள்ளர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கை இன்று வரை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் புதிதாக திறக்கப்படவுள்ள துறைமுகத்திற்காவது அவரது பெயரைச் சூட்ட வேண்டும். துறைமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடும்போதே கடலூர் அஞ்சலையம்மாள் துறைமுகம் என்று அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version