சரக்கு ரயில் போல சரக்கு விண்கலம்! சர்வதேச விண்வெளிக்கு ஐஸ்க்ரீம் கொண்டு சென்றது!
இது நமக்கு புதிதாக இருக்கிறதல்லவா? சரக்கு வாகனங்கள் தான் உள்ளது. இது என்னடா புதுசா என்று யோசிப்போருக்கு அப்படி ஒன்று உள்ளது. ஆமாம். விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள அறிவியலாளர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்ல ஏதுவாக இருக்கும் என்று இவ்வாறு அனுப்பப் படுகிறது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 408 கிலோமீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இந்த விண்வெளி மையத்தில் சுழற்சி முறையில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுகள் ஆகியவை சரக்கு விண்கலங்கள் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை ஒன்றிணைந்து 2170 கிலோ எடையுள்ள சரக்குகளை பால்கன் 9 ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு தேவையான கருவிகள், விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியுள்ள 7 விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், ஐஸ்கிரீம் உட்பட மற்றும் ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மனித உயரம் உடைய ரோபோக்கள் உள்ளிட்டவற்றை சரக்கு விண்கலத்தில் அனுப்பிவைத்தனர் இந்த சரக்கு விண்கலம் திங்கட் கிழமையான இன்று விண்வெளி ஆய்வு மையத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.